நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த விஷால் பட இயக்குனர்

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ‘இரும்புத்திரை, ஹீரோ மற்றும் சர்தார்‘ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவார். இவர் அடுத்ததாக சர்தார் படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், தனது நீண்ட கால காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை நேற்று(பிப்.12) திருமணம் செய்துக்கொண்டார். சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும், பி.எஸ்.மித்ரனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ‘மேயாத மான், ஆடை‘ போன்ற படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ‘அயலான்‘ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்