நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கும் மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவின் 20-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது தமிழிலும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

தயாரிப்பாளர் Y NOT சசிகாந்த் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘டெஸ்ட்‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டெக்னிக்கல் குழுவை அறிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்