நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62-வது படமான ‘விடா முயற்சி‘படத்தில் அடுத்த மாதத்தில் இருந்து நடிக்க போகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் அஜித் 2 வேடங்களில் நடிப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே இப்படத்திற்கான இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி.
அந்தவகையில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கங்கனா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு ‘வாலி, வில்லன், அசல், பில்லா‘ உள்பட பல படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் 2 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










