‘நான் ஈ‘ இரண்டாம் பாகம் வந்தால் நல்ல இருக்கும் – நானி விளக்கம்

தமிழில் ‘வெப்பம்‘ படத்தில் நடித்து பிரபலமானவர் நானி. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்த ‘நான் ஈ‘ படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது ‘தசரா‘ படத்தில் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நானி அளித்துள்ள பேட்டியில், “ சில படங்கள் பான் இந்தியா படங்களாகின்றன. பாகுபலி 2-ம் பாகத்தை பான் இந்தியா படம் என்பேன். தசரா பல மொழிகளில் வெளியாகிறது.

நிலக்கரி தொழிலாளர்கள் வாழ்க்கைதான் தசரா படம். 1980 கால கட்ட கதை என்பதால்  படப்பிடிப்பில் கஷ்டப்பட்டு நடித்தோம்.  படப்பிடிப்பில் கேரவன் உள்பட எங்கும் தூசியாகவே இருந்தது. கீர்த்தி சுரேசுக்கு முக்கியமான கேரக்டர். அவருக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. கமர்ஷியல் படங்களை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். நிறைய இரண்டாம் பாகம் படங்கள் வருகின்றன. நான் நடித்த ‘நான் ஈ‘ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது“ என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்