நற்பணி மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்

தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு‘ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவார் நடிகர் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து, ‘குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர், கட்டா குஸ்தி, சிலுக்குவார்பட்டி சிங்கம்‘  உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நேற்றைய முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவருடைய பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வணக்கம்! என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்‘ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்’’ என்று நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்