நரிகுறவர் இன மக்களை ஒதுக்கிய ரோகிணி திரையரங்கம் – ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு…!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல‘. இந்த படத்தை பார்க்க நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. தீண்டாமையை கடைபிடித்ததாக சர்ச்சை உருவானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. தியேட்டர் நிர்வாகத்தையும், அந்த ஊழியரையும் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் பரவிய வீடியோவை தொடர்ந்து அவர்களை ஏன் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறித்து குறிப்பிட்ட திரையங்கம் இப்போது விளக்கம் அளித்துள்ளனர். அதாவது இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் கூறியதாவது, “பத்து தல படம் யு/ஏ சான்றிதழ் கொண்ட திரைப்படமாகும். 12 வயது குறைவான சிறுவர்கள் இந்த படத்தை காண அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுடன் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால் சிறுவர்களை ஊழியர் அனுமதிக்கவில்லை.

ஆனால், இந்த விவகாரம் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுவதால், பின்னர் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை வெளியாகும் ‘விடுதலை‘ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அந்த படத்திற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்