நடிகர் விஜய்யை வைத்து ‘லியோ‘ படத்தை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர், கைதி, விக்ரம்‘ என இவரின் அனைத்து படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிப்பதிலும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இவரை ஹீரோவாக வைத்து ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு இயக்க உள்ளனர். இதற்கிடையே ஆர்.கே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
கோகுல் இயக்கும் இப்படத்தில் சிகை அலங்கார நிபுணராக பாலாஜி நடிக்கிறார். இதற்காக அவர் முடி வெட்டும் பயிற்சியையும் எடுத்துள்ளார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லோகேஷ் உடன் பாலாஜி எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.










