நடிக்கவிடாமல் சக நடிகரை ஆள் வைத்து அடித்த நடிகர் வடிவேலு

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் நடிகர் வடிவேலு. இவர் நடிப்பில் தற்போது ‘மாமன்னன்‘ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சுகுமார் வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ்டிவியின் ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே நடித்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது. ‘தவசி‘ என்ற படத்தில் அவர் வடிவேலு போலவே  நடித்து இருக்கிறார். அதே போல நடிக்க பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்று இருக்கின்றனர். அப்போது ‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி போய் சொல்லிட்டு இருக்கியாமே‘ என வடிவேலு கேட்டாராம். இதற்கு ‘முதல் படம் என்பதால் நடித்துவிட்டேன், இனி நடிக்கமாட்டேன் அண்ணே‘ என சுகுமார் பம்மி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள். இந்த அவமானத்தில் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். என் மனைவி தான் என்னை தடுத்தார். அதன்பிறகு தான் ‘காதல்‘ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி முற்றிலும் வேறு விதமாக நடித்தேன்“ என நடிகர் சுகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்