நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக களமிறங்கும் ’கபாலி’ பட நடிகை!

ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜ் நடித்த ’தோனி’ படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.  ஆனால், இந்த படம் மக்களிடையே அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. அதன் பின் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக ’கபாலி’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இவர் முதலில் ஹிந்தி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதன் பிறகு தமிழ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் இதுவரை நடித்துள்ளார்.

இந்த நிலையில் முதன்முறையாக மலையாள திரையுலகில் மோகன்லால் படத்தில் நடிப்பதன் மூலம் அடியெடுத்து வைக்க இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி அடுத்ததாக மோகன்லாலை வைத்து இயக்க இருக்கும் படத்தில் தான் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும்  இந்தப் படம் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்