நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ‘தீராக் காதல்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்து குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
மனைவி, குழந்தைகளுடன் வாழும் ஜெய் தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார். அதன்பின் இவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் இப்படத்தில் ஜெய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










