நடிகர் கார்த்தியுடன் இணையும் கிருத்தி ஷெட்டி…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்-2‘ ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது. தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் அவரின் 25-வது படமான ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து காயத்ரி பரத்வாஜ் விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதில் இப்போது கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்