தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த சந்தானம், சூரி, சதீஷ் ஆகியோர் கதாநாயகனாக நடிப்பதில் தீவிரமாகி விட்டனர். எனவே தற்போது நகைச்சுவை நடிகர்கள் பற்றாக்குறை அதிகமாகவே காணப்படுகிறது. நடிகர் யோகிபாபுவோ பல படங்களில் காமெடி நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த இடைவெளியில் கடந்த 2 வருடங்களில் சற்றே நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘டாக்டர், அண்ணாத்த, கட்டா குஸ்தி என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக முக்கிய இடம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ‘ஈரம்‘ படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி மீண்டும் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சப்தம்‘. இந்த படத்தில் தற்போது நகைச்சுவை நடிகராக இணைந்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி. இதை இப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.










