இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சதீஷ், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நாயகனாக நடித்த முதல் படமான ‘நாய் சேகர்‘ ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்து ஓ மை கோஸ்ட் படத்திலும் பிரதான வேடத்தில் நடித்தார். அடுத்ததாக அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒயிட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் ரவீந்திரன், லலித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக வெங்கி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.










