தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக உள்ள தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ‘வாத்தி‘ படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் மூன்றாவது முறையாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கிஷோர் ரெட்டி இயக்கவுள்ளார். இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்