தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இயக்குனர் செல்வராகவன்…

 

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இயக்குனர் தான் செல்வராகவன். இன்று உலகப்புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் தனுஷை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியவர் தான் செல்வராகவன். ‘துள்ளுவதே இளமை‘ என்ற படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை துவங்கிய செல்வராகவன் ‘காதல் கொண்டேன்‘ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க செய்தார். இவர் இயக்கத்தில் வெளியான ‘7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என இவரின் படைப்புகள் காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவையாக அமைந்தது. மீண்டும் தனுஷ் கூட்டணியில் இவர் கடைசியாக இயக்கிய படம் ‘நானே வருவேன்‘.

இப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. படங்களை இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் திடீரென நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் நடிப்பில் ‘சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன்‘ போன்ற படங்கள் வெளிவந்தன. மேலும் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் ‘சொர்க்கவாசல்‘ படத்திலும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனும் இணைந்து இருக்கிறார். அதோடு ‘பகாசூரன்‘ படத்தில் நடித்தது போன்று இந்த படத்திலும் செல்வராகவன் ஒரு அழுத்தமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்