தொடர்ந்து கசிந்து வரும் விஜய் 68 அப்டேட்டால் கோபமடைந்த வெங்கட் பிரபு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ என்னும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் கவுதம் மேனன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பற்றி வெங்கட் பிரபு உதவி இயக்குனர்களிடம் டிஸ்கஷன் செய்து வருகிறார். அப்போது, அவர் அஜித்துக்கு ‘மங்காத்தா‘ படம் எப்படி ஒரு ஹிட் படமாக அமைந்ததோ, அதே போல விஜய்க்கும் இது பெரிய ஹிட் படமாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று பரவியது. இதனால் வெங்கட் பிரபு மிகுந்த கோபம் அடைந்துள்ளாராம். இவர் தனது உதவி இயக்குனர்களை அழைத்து, “ உங்களில் யாரோ ஒருவரின் மூலம் தான் தகவல் லீக்காகி இருக்கிறது. ஆகையால் நீங்கள் யாரும் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்திலேயே தங்கி விடுங்கள் “ என ஸ்ட்ரிட்டாக ஆர்டர் போட்டுள்ளார்.

மேலும், வெங்கட் பிரபுவும் வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்