நடிகர் கார்த்திக் தற்போது இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து வருகிறார். அதேப் போல் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்‘ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மாவீரன் படமும், ஜப்பான் படமும் ஜுன் 29-ம் தேதியன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு கார்த்தியின் ‘தம்பி‘ படமும், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ‘ படமும் ஒரே நாளில் வெளியாகின. மேலும் கடந்தாண்டு தீபாவளிக்கு ‘சர்தார் – பிரின்ஸ்‘ படமும் வெளியாகின. இதில் ‘சர்தார்‘ வெற்றி பெற்றது. ‘பிரின்ஸ்‘ தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும் ‘மாவீரன் – ஜப்பான்‘ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இருவரும் மோதிக் கொள்கின்றனர்.










