திரையில் வெளியாகும் ‘சக்திமான்‘ தொடர்!

தொண்ணூறு காலக்கட்டத்தில் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்த சூப்பர் ஹீரோ என்றால் அது ‘சக்திமான்‘ தான். இத்தொடர் அப்போது தூர்தர்ஷனில் சில ஆண்டுகள் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் தொடரை பிரமாண்டமான படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என முகேஷ் கூறியிருந்தார்.

ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு படம் நகரவில்லை. இந்நிலையில் தற்போது இப்படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது குறித்து சமீபத்தில் முகேஷ் கண்ணா கூறுகையில், “சக்திமான் தொடர் இப்போது ரூ.300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாக இருக்கிறது. கொரோனாவால் தான் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. தேவையில்லாமல் எந்த ஒப்பிடும் இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர் விவரம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும்“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்