திருமண வதந்தியால் வருத்தமடைந்த பிரபல நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்‘ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘தொடரி, சாமி-2, பைரவா, சண்டக்கோழி-2, ரஜினி முருகன், ரொமோ‘ என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதியுடன் இணைந்து ‘மாமன்னன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழிலதிபரை மணக்க இருப்பதாக கூறினார்.

பின்னர் துபாய் தொழில் அதிபரோடு இணைந்து பேசப்பட்டார். இதற்கு குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் திருமண வதந்திகள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “ என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். சமூக வலைதளத்தில் எனக்கு திருமணமே செய்து வைத்துவிட்டார்கள். ஏன் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது “ என்று கூறியுள்ளார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ நடிகையர் திலகம் படத்தில் நடித்தது எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து 6 மாதங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.

ஆனால் பெண்களை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களே வந்தன. இதனால் வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டேன்“ என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்