திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் தாயார்….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக செய்தி இணையதளத்தில் பரவி வந்தது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், கேரளாவை சேர்ந்த ரிசார்ட்ஸ் உரிமையாளரான, கீர்த்தியின் பள்ளி தோழருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா கூறுகையில், ‘பரபரப்புக்காகவே கிளப்பி விடப்பட்ட தவறான செய்தி அது. மேலும் இது போன்ற செய்தியை பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சமூகவலைதள பசிக்கு எங்கள் பதில் இதுதான். இதுபற்றி பேச எதுவும் இல்லை‘ எனக் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்