திடீரென மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடிகை எமி.ஜாக்சன்!

பிரிட்டனை சேர்ந்த ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன், ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில்

ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்ததாக ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். இதன்பின் விஜய்யுடன் ‘தெறி’, தனுஷுக்கு ஜோடியாக ‘தங்கமகன்’, ரஜினியின் ‘2.0’ போன்ற படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் எமி.

அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்த எமி, ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.இப்போது மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ள நிலையில், படக்குழுவினரும் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதில் க்ளைமேக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம், அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகிவிட்டார் எமி, என்பது தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்