தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமா? தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? என்கிற நிலையில் தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதுதான் முதல் லட்சியம். வெற்றியை எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில்தான், பேறிஞர் அண்ணா குறித்து விமர்சனத்தை முன் வைத்து, சிதறு தேங்காய் போல பாஜக – அதிமுக கூட்டணியை சிதற வைத்தார். இது ஒரு கனம் டெல்லி பாஜக தலைவர்களே அலற வைத்தது.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்த பிறகு, கட்சி வளர்ந்தாலும், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட டெல்லி பாஜக தலைவர்களை பொறுத்தவரை கட்சி வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நடக்க இருக்க கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் தவற விடும் நாடாளுமன்ற தொகுதிகளை, தமிழகத்தில் ஈடுசெய்து, வெற்றிமாலையை கழுத்தில் தொங்க விட்டு, 3-வது முறையாக அரியணையில் பாஜகவே ஹாட்ரிக் மகிழ்ச்சியோடு அமர வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த அடிப்படையில் தான், கூட்டணி முறிவு குறித்து டெல்லி சென்று, தேசிய தலைவர்களிடம் தெளிவுபடுத்தி இருந்தாலும், ’தனித்து நின்றாலும், பாஜக வளரும், வாக்கு சதவீதம் உயரும்’ என்கிற கருத்துக்களை முன் வைத்தாலும், டெல்லி பாஜக தலைவர்கள், எந்தவொரு பதிலும் சொல்லாமல் மெளனமாகவே இருந்து வருகிறார்கள்.
காரணம் நடக்க இருக்க கூடிய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் தான். இந்தத் தேர்தல்களில் கணித்தது போலவே பாஜக அபார வெற்றிபெற்றால், தமிழகத்தில் தனித்து போட்டியா, இல்லையா என்பதை உறுதி செய்யலாம். அந்த 5 மாநிலங்களில் சம்மட்டி அடி வாங்கினால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தான் என்கிற ரெண்டாம் கெட்ட நிலையில் இருந்துகொண்டு இருக்கிறார்கள் என்கிற செய்திகளே டெல்லியில் நடக்கும் நகர்வுகள் தெளிவுபடுத்துகிறது.
ஆனால், தமிழகத்தில் பாஜக – அதிமுக கடுமையாக மோதிய நிலை நாளுக்கு நாள் வீரியம் குறைந்துகொண்டுதான் வருகிறது. இப்படியான நிலையில் தான், அண்ணாமலை,
’’கடந்த 1998ல் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. அதில், நிறைய கட்சிகள் சேர்ந்துள்ளன, சில கட்சிகள் வெளியேறிச் சென்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும், தன் வளர்ச்சியை மையமாக வைத்தே செயல்படும். பாஜக அதற்கு விதிவிலக்கல்ல. ஒருவர் இருக்கிறார் என்கிற மகிழ்ச்சியோ, ஒருவர் சொன்றுவிட்டார் என்கிற வருத்தமோ என்னிடம் இல்லை.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைய வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தமிழகத்தில் 39 தொகுதிகளும் மோடி பக்கம் வரும். தமிழகத்தில் பல கட்சிகள் என் மீது வீன் பழியை, குற்றத்தை சுமத்துகின்றன. என் பாதையில் நான் செல்ல வேண்டும். பாஜக செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்ளவில்லை.
எங்களை பொறுத்தவரை, 2024- ஆம் ஆண்டு தேர்தல் மீடிக்கானது. பாஜகவின் வளர்ச்சியை 2024 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். திமுகவா, பாஜகவா
என்பதுதான் சவால். இரு கட்சிகள் இடையில் தான் போட்டி, தமிழகத்தை பொறுத்தவரை 2024 தேர்தல் திமுக மற்றும் பாஜக் இடையேதான்.
ஏனெனிலில், 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆளும்கட்சியாக இருக்கிறது. திமிழகத்தில் திமுக இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இரு கட்சிகளும் தாங்கள் செய்த சாதனைகளை மக்கள் முன் வைக்கும். அதேவேளையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. மேலிட தலைவர்கள் தான் தெரிவிப்பார்கள்’ என்று தெரிவித்து இருக்கிறார்.
ஆக, மொத்தத்தில் அதிமுக தலைவர்கள் பாஜகவை குறிவைத்து தாக்கி வரும் நிலையில், அண்ணாமலையோ வாய் திறக்காமல் கூட்டணி விவகாரத்தை கடந்து செல்வதும், திமுகவை மட்டும் டார்கெட் செய்வதும், அண்ணாமலை அடித்தது சாதாரண டேர்ன் இல்லை, பெரிய யுடேர்ன் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.










