“தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

பிப்ரவரி 28- ம் தேதி மாலை 05.00 மணியளவில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, திருவள்ளூர் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினோம்.அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதலை தெரிவித்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை (TamilNadu CM Trophy), கேலோ இந்தியாவை (Khelo India) தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராகப் பதவியேற்று முதன்முறையாக, பிரதமர் நரேந்திர மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்