தமன்னாவின் வருங்கால கணவர் இவரா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் தமன்னா. 30 வயதைக் கடந்த தமன்னா பற்றி அடிக்கடி காதல், திருமண வதந்திகள் வருவது வழக்கம். அவரும் அதற்கு வழக்கம் போல மறுப்பு தெரிவிப்பார். ஆனால், இந்த முறை அப்படி மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாது. அவரது காதலருக்கு முத்தம் கொடுத்து புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ‘விஜய் வர்மா‘ என்பவர்தான் தமன்னாவின் காதலன். அவருடன் கோவாவில் தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார். மேலும் ஒரு பார்ட்டியில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ‘பின்க், பாகி3, டார்லிங்ஸ்‘ உள்ளிட்ட ஹிந்திப் படங்களில் நடித்துள்ளவர் விஜய் வர்மா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்