தன்னை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாத்திமா பாபு

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவார். தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல் , சினிமா, தொலைக்காட்சி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் ஒருவர் ‘உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை‘  என்று கேட்டார்.

அதற்கு பத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளிவாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார்.

இதனால் மிரண்டு போன அந்த நபர், ‘ இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கலா‘ என்று சொல்ல, அதற்கும் பாத்திமா பாபு, ‘பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?‘ என காட்டமாக பதிவிட்டார்.

இதனையடுத்து அந்த நபர் பிரச்சனை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்