பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘பசங்க‘ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். இப்படத்தில் அன்புக்கரசு என்கிற கேரக்டரில் ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் கிஷோர். மேலும் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகராக மாறினார். தொடர்ந்து ‘கோலிசோடா‘ உள்ளிட்ட தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்தார். ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது சிறியவர்.
இதுகுறித்து அப்போது சில விமர்சனங்களும் எழுந்தன. அதேசமயம் தனது காதலில் உறுதியாக இருந்த கிஷோர் ‘அடுத்த பிறந்த நாளை கணவன் மனைவியாக கொண்டாடுவோம்‘ என உறுதியாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சொன்ன மாதிரி கிஷோர்-ப்ரீத்தி திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.










