மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்‘. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்து அசத்தியிருப்பார். இப்படம் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று மோகன்ராஜா அறிவித்தார்.
இந்நிலையில் தனி ஒருவன் 2 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் மோகன் ராஜாவுக்கு கால் ஷீட் கிடைக்கவில்லை. தற்போது மோகன் ராஜா தெலுங்கு படங்களை பிஸியாக இயக்கி வருவதால் தனி ஒருவன் இரண்டாம் பாகம் தாமதம் ஆகுவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.










