‘தங்கலான்‘ என் வாழ்க்கையில் சிறந்த படம் – நடிகர் விக்ரம் மகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக ‘பொன்னியின் செல்வன் 2‘ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் ‘தங்கலான்‘ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசியதாவது, ‘ பிதாமகன், ஐ, இராவணன்‘ போன்ற படங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள். ஆனால், தங்கலானுடன் ஒப்பிடும் போது அதெல்லாம் மூன்று சதவீதம் கூட இல்லை. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் கஷ்டமாக தான் இருந்தது. காதல் கூட வெறித்தனமாக காதலாக தான் இருக்கும்.

இந்த மாதிரி தேடி தேடி அலையும் சில கதாபாத்திரங்கள் என்னை தேடி வரவில்லை என்பது தான் மிகப்பெரிய கஷ்டம். இந்த படம் குறித்து இரஞ்சித் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த படம் எங்களுடைய வாழ்க்கையின் சிறந்த படமாக இருக்கும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்