டிவிட்டரை விட்டு வெளியேறுகிறார் எலான் மஸ்க்? வாக்கெடுப்பில் பின்னடைவு

டிவிட்டர் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேற வேண்டும் என அதிரடியான எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்காக அவரே நடத்திய வாக்கெடுப்பில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் டிவிட்டர் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் ராஜினாமா செய்யக் கூடும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்-ன் நிர்வாகத்தின் கீழ் டிவிட்டர் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களில் அதிகப்படியான நெருக்கடிக்கு மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார். இதில் கடுப்பான எலான் மஸ்க் வழக்கம் போல் மக்களிடமே தனது குழப்பத்திற்கான முடிவை கேட்டுள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய முதல் நாளில் இருந்து அதிரடியான மாற்றங்கள், முடிவுகள் என நகர்ந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெஸ்லா நிர்வாகக் குழுவில் இருந்தும் அதிகப்படியான நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்த நிலையில்தான் டிவிட்டர் நிறுவனத்தில் இருக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தில் புதிய அதிரடி கொள்கை மாற்றத்தை அறிவித்தார். இந்தக் கொள்கை மாற்றம் நெட்டிசன்கள் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “தான் செய்தது மிகப் பெரும் தவறு” என்பதை எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து டிவிட்டரில் எலான் மஸ்க் “தான் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா..?” என்பதற்கான முடிவை மக்களிடம் கேட்க முடிவு செய்து டிவிட்டரில் இதற்கான வாக்கெடுப்பை நடத்தினார்.

இந்நிலையில் இதுவரையிலான வாக்கெடுப்பு முடிவுகள் எலான் மஸ்க் வெளியேற வேண்டும் என்பதற்கு அதிகமாக வாக்குகள் விழுந்துள்ளன. அதாவது, வாக்கெடுப்பில் எலான் மஸ்க் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் 1.12 கோடி பேர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர், இதில் 56.3 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்றும், 43.7 சதவீதம் பேர் இருக்கலாம் எனவும் பதில் அளித்துள்ளனர்.

எனவே இந்த வாக்கெடுப்பு முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் பட நடக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எலான் மஸ்க் ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் கொதிப்புக்கு காரணம் என்ன?

டிவிட்டர் தளத்தில் இனி சக போட்டி சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், Mastodon, Tribel, Nostr, Post, டிரம்ப்-ன் Truth Social ஆகியவற்றை இணைக்கக் கூடாது என்றும், இதன் லிங்க்-களை டிவிட்டர் தளத்தில் பதிவிடக் கூடாது என்ற மிகப்பெரிய கொள்கை மாற்றத்தை எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் கொண்டு வந்தது. இந்தக் கொள்கையை வெளியிட்ட உடனே மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவானது, இதுவே எலான் மஸ்க்கிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்