டாக்டர் பட்டம் பெற்ற பிரபல இயக்குனரின் அம்மா

தமிழ் திரையுலகில்  முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் நடிப்பில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் இவரின் தாயார் மேகலா சித்ரவேல் ஒரு எழுத்தாளர் என்பது பலரும் அறியாத ஒன்று. ‘கமலி அண்ணி, ரதிதேவி வந்தாள், வசந்தமே வருக, மழை மேக மயில்கள்‘ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார்.

தற்போது எம்ஜிஆர் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மேகலா சித்ரவேல் கூறியதாவது, “ என்னைப் படிக்க வைத்ததே என் மகன் வெற்றிமாறன் தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது.

எனது கைடு பேராசிரியர் பிரபாகர். ஒரு ஆய்வு கட்டுரை எழுதுங்கள் அதற்கு நிறைய படியுங்கள் என்றார். நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். அவர் சொன்னதை என் பையனிடம் சொன்னேன். அவன் உடனே ‘கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா‘ என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான் “ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்