சொன்னதை செய்த பிக்பாஸ் அசீம்

முகமது அசீம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் பின் விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் அவர் நடித்த ‘பகல் நிலவு‘ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன்பின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துக் கொண்டார். இதில் ரசிகர்கள் அவரை பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வந்தனார். ஆனால் கடைசியில் ‘டைட்டில் வின்னர்‘ என்ற பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, அவர் தான் இந்த போட்டியில் ஜெயித்தால் பரிசுத் தொகை 50 லட்சத்தில், 25 லட்சத்தை கோவிட்டின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு தருவேன் என்று கூறியிருந்தார். தற்போது தான் உறுதியளித்தபடி அந்த 25 லட்சத்தை தர தயாராக உள்ளேன். இதற்கு தகுதியானவர்கள் அவரை தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் சொன்னதை செய்து காட்டியுள்ளார் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்