தி வுமன் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது ஆண் என்பது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன்.
எனக்கு பாலியல் தொல்லை தொடங்கிய போது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது“ என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன்.
எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது என்று கூறினார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை உண்டாகியுள்ளது.










