சினிமாவில் கால் பதிக்கும் அஜய் தேவகன் – கஜோல் தம்பதியினரின் மகள்

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரில் குறிப்பிட வேண்டியவர்கள் அஜய் தேவகன் – கஜோல். இவர்களுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் இருக்கிறார்கள். 20 வயதை அடுத்த மாதம் கடக்க உள்ள நைசாவின் சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் இணையத்தில் வைரலாகி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளன. அந்த புகைப்படங்களில் அப்படியே அம்மா கஜோல் போலவே இருக்கிறார். நைசா புகைப்படத்தையும், கஜோல் புகைப்படத்தையும் பகிர்ந்து அம்மாவைப் போலவே மகளும் அழகு என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

நைசாவின் பல கிளாமர் புகைப்படங்கள் ஏற்கனவே இணையங்களில் சர்ச்சை கலந்த வரவேற்பைப் பெற்றது. பாலிவுட்டில் நட்சத்திர தம்பதியரின் வாரிசு, நடிகர், நடிகைகளின் வாரிசுகளுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் விரைவில் நைசாவும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்