சினிமாவில் கவர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள் – நடிகை ஜீனத் அமன் ஆவேசம்

பாலிவுட் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஜீனத் அமன். இவர் ‘தம்மர தம்‘ என்ற பாடலில் ஆடிப்பாடி அந்த காலத்து இந்திய இளைஞர்களை கவர்ந்தார். தற்போது வயதான நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இவர் 1971-ம் ஆண்டு ‘ஹல்சல்‘ படத்தின் மூலம் பாலிவுட்டில் ஜீனத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் ‘ யாதோங் கி பாரத், ரொட்டி பிராடோ அவுர் மகன், சத்தியம் சிவம் சுந்தரம், டான் மற்றும் தோஸ்தானா‘ போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 71 வயதான பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தனது இளமை காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தற்போதைய இளைஞர்களையும் வாயடைக்க செய்து வருகிறார். ஜீனத் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு பதிவில் “ஒரு ஹீரோயின் திறமையை பார்ப்பது இல்லை. அவர்களின் மார்பு, இடுப்பு, முகம் பார்ப்பதில் தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க நிறைய கஷ்டப்பட வேண்டும். சினிமா உலகில் வாய்ப்புக்காக அட்செஸ்மெண்ட் செய்தாக வேண்டும்“ என கூறியுள்ளார்.

மேலும், “ திரைப்படங்களில் பணியாற்ற நடிகைகள் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரிடமும் அட்செஸ்மெண்ட் செய்தாக வேண்டும். அதன் பிறகு அவருக்கு படத்தில் வாய்ப்பு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படியே இருக்கிறது என்று நடிகை ஜீனத் அமன் தெரிவித்தார். எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், எனது திறமை மீது அல்ல, எனது முகம் மற்றும் உருவத்தில் தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

அதற்காக மெலிதான இடுப்பு மற்றும் கவர்ச்சியான உருவம் கொண்ட கவர்ச்சியான பெண்கள் மட்டுமே சினிமாவில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொழில்துறையில் இந்த யதார்த்தத்தை அறிந்த பிறகு, நான் என் தோற்றத்தைப் அவ்வாறாக மாற்றிக் கொண்டேன். அப்படிப்பட்ட பாத்திரங்களை தேர்ந்தெடுத்தேன். எனது பணி மற்றும் நான் செய்த எதற்கும் எனக்கு வருத்தம் இல்லை “ என்று கூறியுள்ளார் நடிகை ஜீனத் அமன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்