சாதனை மேல் சாதனை ‘அவதார் 2‘

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஹாலிவுட் படம் ‘அவதார் த வே ஆப் வாட்டர்‘. இப்படம் இதுவரையில் இந்தியாவில் ரூ.450 கோடி வசூலைக் தாண்டி அதிக வசூலைப் பெற்ற ஹாலிவுட் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது. இதற்கு முன்பாக ‘அவஞ்சர்ஸ் என்ட்கேம்‘ படம் 438 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் இருந்ததை ‘அவதார் 2‘ முறியடித்துள்ளது. மேலும் உலக அளவில் 1.7 பில்லியன்  யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14,060 கோடி வசூலை ‘அவதார் 2‘ பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் ‘அவதார் 2‘ படம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 527 மில்லியன் யுஎஸ் டாலர், உலக அளவில் 1.19 பில்லியன் யுஎஸ்  டாலர் தொகை இப்படம் வசூலித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் ‘ப்ரேக்-ஈவன்‘ புள்ளியைக் கடந்துவிட்டதாக அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். இதற்கடுத்த அவதார் சீரிஸ் படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் கூறினார். மேலும், ‘அவதார் 3‘ படம் 2024 டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்