‘சந்திரமுகி 2 என்னை மரண பயத்தில் ஆழ்த்தியது‘ – கீரவாணி விளக்கம்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி‘. இதில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர், மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் அந்தகாலக்கட்டத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் ‘சந்திரமுகி 2‘ படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் லாரன்ஸ்.

ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மகிமா நம்பியார் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 14-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ‘சந்திரமுகி 2‘ படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் கீரவாணி தனது டுவிட்டர் பக்கத்தில், படம் குறித்து முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், “சந்திரமுகி 2-ல் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு 2 மாதங்கள் தூக்கமில்லாமல் இரவு பகல் பாராமல் படத்தின் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளேன்“ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்