‘கேப்டன் மில்லர்‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28-ம் தேதி ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படம் 3 பாகங்களாக உருவாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது என கூறப்பட்டது. அதன் காரணமாக இப்படம் 3 காலங்களாக பிரித்து படமாக எடுக்கப்படுகிறது.

முதல் பாகம் 1940-களில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டதாகவும், இரண்டாம் பாகம் 1990-களில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டதாகவும் மற்றும் மூன்றாம் பாகம் இன்றைய காலகட்டத்தில் நடப்பது போல அமையப்பெறும் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்