தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் கார்த்தியின் 27-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ‘96‘ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.










