காரை விட்டு இறங்கி வந்து ரசிகர்களுக்கு செல்பி கொடுத்த ரஜினி…!

 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி. அப்போது அவரை சூழ்ந்து ரசிகர்கள் பல பேர் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் ரஜினியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினி காரில் ஏறி அமர்ந்துவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் கேட்க, உடனே காரைவிட்டு இறங்கி வந்தார் ரஜினி. மேலும்  அங்கே இருந்த போலீஸ் அதிகாரிகள் குரூப்பாகவும், தனித்தனியாகவும் அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்