பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பதான்‘ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் அட்லீ. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், முழு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாரா ரூ.11 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் தீபிகா படுகோனே ரூ.17 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
அதேபோல் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ.21 கோடி சம்பளம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.










