கணவரை விட்டு பிரிந்து வாழும் நடிகை அசின்

தமிழ் சினிமாவின் 20 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி‘ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘ சிவகாசி, கஜினி,வேல், போக்கிரி, மஜா, தசாவதாரம்‘ என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்தார்.

ஆனால் அவருக்கு அங்கே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கையை விட்டு விலகியிருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அரின் என பெயரும் வைத்தனர்.

இந்நிலையில் தற்போது அசினின் கணவர் ராகுலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் நடிகை அசின் எச்சரித்தும் அவர் கேட்காததால் கோபத்தில் அசின் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகளுடன் அசின் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்