ஒரே நாளில் வெளியாகும் 7 தமிழ் படங்கள்

இந்த ஆண்டின் துவக்கமான ஜனவரி மாதத்தில் மொத்தமாக  7 படங்கள் மட்டுமே வெளிவந்தது. அதில் பொங்கலுக்கு வெளியான முன்னணி ஹீரோக்களின் படமான ‘துணிவு, வாரிசு‘ மட்டுமே திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல வசூலைக் கொடுத்த படங்களாக அமைந்தது. கடந்த ஒரு மாதம் முழுவதும் மொத்தமாக 7 படங்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்தின் மூன்றாம் நாளில் மட்டுமே 7 படங்கள் வெளியாக உள்ளது. “ரன் பேபி ரன், மைக்கேல், தி கிரேட் இந்தியன் கிச்சன், நான் கடவுள் இல்லை, தலைக்கூத்தல், பொம்மைநாயகி, குற்றப்பின்னணி“ ஆகிய படங்கள் வெளிவருவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் ‘ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன், ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பிலும், ‘தலைக்கூத்தல், நான் கடவுள் இல்லை‘ சமுத்திரக்கனி நடிப்பிலும் வெளியாக உள்ளது. மேலும் இந்த வாரம் மட்டுமல்ல வரும் வாரங்களிலும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளிவர உள்ளன. பிப்ரவரி 10-ல் “காசேதான் கடவுளடா, வசந்த முல்லை, டாடா“ மற்றும் பிப்ரவரி 17-ல் “வாத்தி, பகாசூரன்“ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்