ஒரே நாளில் ரூ.5.30 கோடி வசூல் – திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், பக்தர்களின் காணிக்கையாக உண்டியலில் ரூ.5.30 கோடி வசூலானது.

நாடு முழுவதும் உள்ள ஏராளமானோர், பல கோயில்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், தினமும் ஆயிரக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று, பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். மேலும், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றக்கோரி, ஏழுமலையானுக்கு தங்கம், வெள்ளி நகைகள் மட்டுமின்றி காணிக்கையாக பணத்தையும் கட்டு கட்டாக செலுத்துகின்றனர்.

இந்நிலையில், மார்கழி மாதமான தற்போது, கடுங்குளிர் வாட்டி வதைக்கும். மலை மீது சென்று, அங்கு பக்தர்கள் எப்படி தரிசனம் செய்ய முடியும் என பலரும் யோசிக்கின்றனர். ஆனால், மக்களின் யோசனையை சற்று திசை திருப்பும் விதமாக நேற்று (டிச.20) ஒரே நாளில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வசூல் ரூ.5.30 கோடியை எட்டியது. இதில், நகை காணிக்கைகள் கணக்கில் சேர்க்கவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்