ஏழை மாணவி ஐஏஎஸ் படிக்க நடிகர் ஜெகபதிபாபு உதவி

தெலுங்கு சினிமாவில் 90-களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த 10 வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணவியின் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த ஜெகபதிபாபுவின் தாயார், இது குறித்து தனது மகனிடம் எடுத்துக்கூறி அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அந்தப் பெண்ணை சந்தித்த ஜெகபதிபாபு, அவர் ஐஏஎஸ் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்