‘ஏகே 62‘ வருத்தத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் 62-வது படம் பற்றிய பரபரப்பு இன்னும் ஓயவில்லை. தினம் தினம் ஒரு தகவல் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது பிறகு அவரின் கதை அஜித்க்கு பிடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும் அவர் இயக்கவில்லை என்பது அவர் மூலமாகவே உறுதியான பிறகு வேறு எந்த இயக்குனரும் அது பற்றி பரபரப்புக்காக ஒரு ஹின்ட் கூட இதுவரை கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில், அவரிடம் பல முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும், இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி சொன்ன கதையை ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று இரவு புதிதாக அந்த இயக்குனர்கள்  வரிசையில் வெங்கட் பிரபுவின் பெயரும் வெளிவந்துள்ளது. விஜய் நடித்த ‘வாரிசு‘, அஜித் நடித்த ‘துணிவு‘ இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒரே நாளில் வெளிவந்தன. விஜய்யின் அடுத்த படமான ‘லியோ‘ படத்தை அறிவித்துவிட்டு அதற்கான படப்பிடிப்பு வேலையை நடந்தி வருகின்றன. ஆனால், அஜித்தின் அடுத்த படத்திற்கான இயக்குனர் யார் என்பதன் பேச்சுவார்த்தை மட்டுமே இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் தெரிந்து கொள்ள அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இச்செய்தி அவருடைய ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்