இயக்குனர் செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் ‘நானே வருவேன்‘. இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து இருந்தார். படங்களை இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருந்த செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘பகாசூரன்‘. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தனுஷ் நடித்த ‘வாத்தி‘ படம் வெளியான அதே நாளில் ரிலீஸானது.
இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் வேதனையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்…..“என்று அவர் பதிவிட்டுள்ளார்.










