உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை எடுத்து கொண்டே படங்களிலும் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சாகுந்தலம்‘ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ‘சிட்டாடல்‘ என்ற வெப் தொடரிலும், ‘குஷி‘ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் மயோசிடிஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் இன்னும் பூரண குணமாகவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட சமந்தா, இந்த நோய் பாதிப்பினால் மிகவும் கஷ்டப்படுவதாக கூறி கண்கலங்கினார். இந்த நிலையில் மீண்டும் தற்போது ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி முழுமையான  சிகிச்சை எடுத்துகொள்ள சமந்தா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மயோசிடிஸ் நோய் உயர் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்