உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ரஜினி 170

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதைதொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்‘ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த். இதற்கிடையே ரஜினியின் அடுத்த படமான 170-வது படத்தை ஞானவேல் இயக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். மேலும் 2024-ல் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது ரஜினி 170-வது படமும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை போன்று ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி, தூக்கு தண்டனைக்கு எதிராக போராடுபவராக நடிக்கிறார். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்