தமிழ் திரைப்பட நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 70. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் செவ்வாழை ராசு ‘கிழக்குச் சீமையிலே‘ திரைப்படம் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகமானவர். இவர் ‘கந்தசாமி, மைனா‘ என பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த ‘பருத்திவீரன்‘ படத்தில் ‘பிணம் தின்னி‘ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு.
இந்நிலையில் நடிகர் செவ்வாழை ராசுவின் உடலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.










