தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அஹமத் ‘என்றென்றும் புன்னகை, மனிதன்‘ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே ‘தனி ஒருவன்‘ படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.










